நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக ராபர்ட் வதோரா ஏற்கனவே 3 முறை ஆஜராகி நிலையில் இன்றும் ஆஜராக இருக்கிறார்.ஏற்கனவே இவர் இந்த வழக்கு விசாரணைக்கு 3 முறை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானது .
இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா மட்டுமல்லாமல் அவருடைய தாயாரும் ஆஜராகிறார். இன்று விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கியது குறித்தும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் அது தொடர்பான பண பரிமாற்றம் சட்டவிரோதமாக நிகழ்ந்ததா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.