நான்கு மணி நேரத்தில் மூன்று ஏடிஎம்களில் குறிவைத்து கொள்ளையடிப்பு..!

Default Image

மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் காவல் நிலையங்களில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று ஏடிஎம்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒன்று மற்றும் ஆக்சிஸ் வங்கியின் இரண்டு வங்கிகள் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது பாதுகாப்புக் காவலர்கள் இல்லை எனவும்,  மூன்று ஏடிஎம்களில் இருந்து திருடப்பட்ட சரியான தொகையை வங்கிகள் இன்னும் எங்களுக்கு தரவில்லை.

இந்த வழக்குகள் குறித்து பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றனஎன்று துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) தீபக் புரோஹித் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த கொள்ளை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதல் கொள்ளை நள்ளிரவில் பஞ்சாபி பாக் மடிபூர் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்மில் நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்தை தொப்பிகள் மற்றும் முகமூடிகள் அணிந்த மூன்று பேர் ஏடிஎம்மில்  நுழைந்து, சிசிடிவி கேமராக்களை ஸ்ப்ரே பெயிண்ட் பயன்படுத்தி, எரிவாயு கட்டர் பயன்படுத்தி பணம் விநியோகிக்கும் இயந்திரத்தை திறந்தனர். பின்னர், அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்