கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் RNA கண்டுபிடிப்பு.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது, என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது, என தெரிவித்தார்.( கொரோனா RNA என்பது DNAவின் எதிர் மாதிரி ஆகும். ) மேலும் அமைச்சர் கூறுகையில், ‘ முகமூடிகளை அணிய வேண்டும் எனவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.’ என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.