ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் காகா ராமகிருஷ்ணா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் பணபலம் மற்றும் ஆள் பலம் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஆனால் இதை தடுக்க இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்ததாக 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ஒரு வேட்பாளர் கூட தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரியும்,தமிழக அரசுக்கும் மற்றும் அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவற்றுக்கு ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தமிழக அரசு, இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.