நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடைப்பெற்றது. விசாரணையில் ரியா போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவர , ரியாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை எனவும், சுஷாந்த் சிங்கிற்கு தான் பழக்கம் இருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங் வீட்டின் மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்ட 8 பேர் மும்பையில் செப்டம்பர் 8 -ஆம் தேதி கைது கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக்காவல் முடிந்த நிலையில், மேலும், நீதிமன்றக் காவல் வரும் 20- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரை தவிர போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரின் நீதிமன்றக்காவலை வருகின்ற 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.ஐ , அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றன.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…