ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும்- அதிர் ரஞ்சன் சவுத்ரி..!
நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று கூறிய நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் சிங் உயிரிழந்தற்கு நாங்கள் அனைவரும் வேதனை அடைகிறோம், ஆனால் ஒரு பெண்ணை குற்றவாளி என்று பொய்யாகக் குறிப்பிடக்கூடாது.ரியா ஒரு அப்பாவி பெண் என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். மேலும் துன்புறுத்தல் இல்லாமல்அவரை விடுவிக்கப்பட வேண்டும், அவர்அரசியல் சதித்திட்டத்தின் பாதிக்கப்பட்டவர் என்று அதிர் ரஞ்சன் கூறினார்.