குஜராத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஜடேஜா மனைவி.!
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது.
அந்த வகையில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா ஆரம்பத்தில் 3ஆம் இடத்தில் பின்தங்கி இருந்தார்.
அதன் பிறகான வாக்கு எண்ணிக்கை முடிவில் படிப்படியாக முன்னேறி தற்போது 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரும், 3ஆம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் இருக்கின்றனர்.