நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தளவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவ தொடங்கியுள்ள நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக,ஒமிக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் மக்கள் அதிகம் கூட இருப்பதால்,கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது.எனவே,இது தொடர்பாகவும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும்,மாநிலங்களில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…