G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல்.
G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியை சுனக் சந்தித்தார். கடந்த மாதம் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதமர் பதவியேற்ற பிறகு இது அவர்களின் முதல் சந்திப்பு. இந்த புகைப்படம் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்த நிலையில், G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணியாற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு 3,000 விசாக்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி பார்ட்னர்ஷிப்பை எடுத்துக்காட்டி, இதுபோன்ற திட்டத்தில் இருந்து பயனடையும் முதல் விசா-தேசிய நாடு இந்தியா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் ட்வீட்டில், UK-India Young Professionals திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்திய குடிமக்கள் இங்கிலாந்துக்கு வந்து 3,000 இடங்களில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும், வேலை செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டையும் விட இங்கிலாந்து இந்தியாவுடன் அதிக தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அனைத்து சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மேலும் இங்கிலாந்தில் இந்திய முதலீடு இங்கிலாந்து முழுவதும் 95,000 வேலைகளை ஆதரிக்கிறது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…