மேல் சிகிச்சைக்காக மும்பை செல்கிறார் ரிஷப் பந்த்..!
ரிஷப் பந்த் டேராடூன் மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த டிச-30ஆம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவர் டேராடூன் மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.