பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரி கீதா மேத்தா வயது முப்பு நோய் காரணமாக தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80. இவருடைய இறப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அதில் ” ஒடிசா முதல்வர் திருவின் சகோதரியும், பிரபல எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கீதா மேத்தாவின் மறைவு செய்தி என்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு நவீன் ஒடிசா டிஎம்டி கீதாவின் பங்களிப்பு மகத்தானது. மாண்புமிகு நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த கீதா மேத்தா ‘கர்ம கோலா’, ‘ஸ்னேக் அண்ட் லேடர்ஸ்’, ‘எ ரிவர் சூத்ரா’, ‘ராஜ்’ மற்றும் ‘தி எடர்னல் கணேஷா’ உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எப்போது தான் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்,…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும்,…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில்…
சென்னை : பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மையம்…