பிரபல உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.!

Default Image

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் சத்னம் கட்ட்ரா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்சன் எனும் கிராமத்தில் பிறந்தவர் 31 வயதான சத்னம் கட்ட்ரா 26-இன்ச் அளவுடைய தனது பைசெப்ஸ் (கையளவு ) மூலம் பிரபலமானவர். இவர் தனது கட்டுக்கோப்பான உடல் கட்டு மூலம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஒரு ரோல் மாடலாக இருந்து வந்துள்ளார். இவர் கட்டாரா பிட்னஸ் கிளப்பில் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது, சொந்த தயாரிப்பில் உடற்பயிற்சி ஊட்டச்சத்து பொருள்களை உற்பத்தி செய்து அதனை வெளியிட காத்திருந்தார். தற்போது உள்ள கொரோனா காலகட்டம் முடிந்த பிறகு அதனை வெளியிட முடிவு செய்து காத்திருந்தார்.
தனது பிட்னஸ் டிப்ஸ் குறித்து டிக் டாக் பதிவுசெய்து மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3,61,000 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இவர் மாநில அளவிலான கபடி போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam
Chennai Corporation Budget 2025