மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்…! 9 பேர் உயிரிழப்பு…!
மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற்ற தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னதாக, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய அரசு ரூ.101.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.