இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்
Metro: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
Read more: பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
இதனுடன் சேர்த்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, புனே மெட்ரோவின் விரிவாக்க பணிகள், கொச்சி மெட்ரோ ரயில் கட்டம் I விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.