கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 லட்சம் நிதியுதவி அளித்த 16 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை.!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும், மாநில முதல்வர்கள் மக்களிடம் நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையோ 16 வயதேயான இளம் கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேற்கு வங்க நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். இந்த காசோலையை சிலிகுரி மாவட்ட நீதிபதி சுமந்தா சாகேயிடம் ரிச்சா கோஷின் தந்தை வழங்கினார்.
கடைசியாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடிய உலகக்கோப்பை போட்டியில் ரிச்சா கோஷ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.