கிருமி நாசினி தயாரிக்க அரிசியை பயன்படுத்த முடிவு செய்த நிலையில் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்காக அனைத்து நாட்டு அரசுகளும் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அனைத்து மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சானிடைசர்கள் அல்லது ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் கொண்டு கழுவ வேண்டும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்குஇடையில் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிருமிநாசினி தயாரிக்க
இந்திய உணவு கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை எத்தனால் ஆக மாற்றி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கவும் முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவிற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,இந்தியாவில் உள்ள ஏழைகள் பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வேளையில் அவர்களுக்கான அரிசியை பயன்படுத்தி பணக்காரர்களின் கைகளை கழுவும் கிருமி நாசினி தயாரிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போதுதான் விழிக்கப்போகிறார்களோ?” என்று பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…