இந்தியாவின் அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சி!!
இந்த ஆண்டு இந்தியாவின் நெல் விதைக்கும் பகுதி வீழ்ச்சியடைந்ததால், அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சியடையக்கூடும் என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் கரிஃப் சீசன் 80 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. பல மாநிலங்களில் குறைந்த மழை பெய்ததால், இதுவரை நெல் விதைக்கும் பகுதி 38 லட்சம் ஹெக்டேர் ஏக்கராக குறைந்துள்ளது. மழை நன்றாக இருந்த மாநிலங்களில் விளைச்சல் மேம்படக்கூடும் என்பதால் உற்பத்தியில் வீழ்ச்சி குறைவாக இருக்கலாம் என்று உணவு செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறினார்.
2021-22 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) அரிசியின் மொத்த உற்பத்தி 130.29 மில்லியன் டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி 116.44 மில்லியன் டன்களை விட 13.85 மில்லியன் டன் அதிகமாகும். பிரதமர் கரிப் கல்யாண் அண்ணா யோஜானா, இலவச உணவு தானிய திட்டத்தை அரசாங்கம் நீட்டிக்குமா என்ற கேள்விக்கு உணவு செயலாளர் சுதன்ஷு பாண்டே பதிலளிக்கவில்லை.