கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார். அந்த புகாரின் அடிபடையில், ராஜு நகர் போலீசார் ரியா உள்ளிட்ட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டதால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதைதொடந்து, ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜராக பதில் அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக வழக்கின் விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்ரபர்தி நேரில் ஆஜர் ஆனார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரியா சக்ரபோர்த்திடம் கேள்வி கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…