காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வழக்கு விசாரணை.!
கடந்த 2019 தேர்தல் முடிந்து 3 மாதத்தில் 20219, ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டம் 370ஐ ரத்து செய்து மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது . இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
மத்திய அரசு சட்டவிதி 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் மீதான விசாரணை அவ்வப்போது நடைபெற்று வந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 2முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டது .
இந்நிலையில் நேற்று முதல் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார். அதில் நாடாளுமன்றத்தில் ஒரு மாநிலத்தின் எல்லைகளை விரிவாக்கலாம். சுருக்கலாம் . இரண்டாக பிரிக்கலாம். அதனை விடுத்தது ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து அதனை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியாது என வாதிட்டார்.
370 சட்டப்பிரவினை ரத்து செய்த மத்திய அரசின் செயல் என்பது அரசியல் செயல். அது அரசியலமைப்பு செயல்பாடு அல்ல. இத்தகைய அரசியல் செயல்பாட்டை நாடாளுமன்றத்தால் தீர்மானிக்க முடியாது. 370 சட்டப்பிரிவை திரும்ப பெறுவது என்பது அரசியல் முடிவு எடுப்பது அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என வாதிட்டார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் முடிந்தவுடன் 3 மாதத்தில் 370 சட்டப்பிரிவை நீக்கய அரசு ஏன் இன்னும் அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் இருக்கிறது? அங்கு சட்டசபை தேர்தலை நடத்த முடியவில்லையா எனவும் வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகிறார்.