புதுச்சேரியில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை – துணை நிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்திருந்தார். 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025