119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தல் 2023 முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, தெலங்கானாவில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பதவியேற்பு விழா டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் மருமகன் ரேவந்த் ரெட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டிஆர்எஸ் வேட்பாளர் மர்ரி ராஜசேகர ரெட்டியை தோற்கடித்தார்.
2023 சட்டமன்றத் தேர்தலில், ரேவந்த் ரெட்டி கோடங்கல் மற்றும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார், ஆனால் காமரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…