காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி..!

தெலுங்கானா மாநில சட்டசபை 119 தொகுதிகளை கொண்டது. இங்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.  இங்கு கடந்த 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற  நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன.

இந்த   முடிவுகளின்படி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார். நாளை இவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் மருமகன் ரேவந்த் ரெட்டி, இவர் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டிஆர்எஸ் வேட்பாளர் மர்ரி ராஜசேகர ரெட்டியை தோற்கடித்தார். 2023 சட்டமன்றத் தேர்தலில், ரேவந்த் ரெட்டி கோடங்கல் மற்றும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!

இந்த நிலையில் இன்று, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி, நாளை பதவியேற்க உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அமைச்சரவை முதல் கோப்பில் கையெழுத்திடும் வாக்குறுதி ஆகியவை குறித்து சோனியா காந்தி உடன் ஆலோசித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்