இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்;மெட்ரோவில் பயணம் செய்ய அனுமதி – அரசு அறிவிப்பு!
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்,இன்று முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ன்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும்,முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதலின்படி முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை இன்று முதல் நீக்குவதாகவும்,டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் எந்த தடையும் இல்லாமல் மெட்ரோவில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது,அவர்கள் நின்று மற்றும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது
நாள் முழுவதும் பயணிகள் நுழைவதற்கு வசதியாக மெட்ரோ நிலையங்களின் அனைத்து வாயில்களும் திறந்தே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.