சீனாவில் சுவாச கோளாறு பிரச்சனை..! இந்தியாவிற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

china

கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு பருவகால சமயத்தில் இம்மாதிரியான சுவாச நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என்று தெரிவித்து இருந்தது.

சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!

இந்த நிலையில், சீனாவில் சுவாச கோளாறு பரவலையடுத்து மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசுகள் கோவிட்-19 திருத்தப்பட்ட கண்காணிப்பு வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவாச பிரச்சனை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்