கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தான் 15 ஆண்டுகள் வடமாநிலத்தில் எம்பியாக இருந்துள்ளதாகவும், அங்கு வித்தியாசமான அரசியல் உள்ளது. ஆனால் கேரளாவிற்கு வரும்போது, தான் புதுமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மக்கள் எந்த ஒரு பிரச்சனையையும் மிக ஆழமாக பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் சிபல் அவர்கள் தெரிவிக்கையில், வாக்காளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும். ஏன் என்றால் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் வாக்காளர்கள் தான். நான் வட மாநில எம்பியாக இருந்தேன் என்பதை குறித்து ராகுல் கூறியதைப் பற்றி ராகுலிடம் தான் கேட்கவேண்டும், எந்த சூழ்நிலையில் அவர் அப்படிக் கூறினார் என தெரியவில்லை எனவும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…