பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன் என்று முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி தெரிவித்துள்ளார்.
இரா பாசு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஊழலில் ஈடுபடுவதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி இரா பாசு கூறியுள்ளார்.
மேலும் கூறிய இரா பாசு, பிரதமர் மோடி நல்ல வேலை செய்து வருகிறார். விவசாயிகளால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றாலும், குறிப்பாக ரயில்வே துறையில் அவர் நல்ல வேலை செய்கிறார், என்று அவர் கூறினார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவியின் சகோதரி இரா பாசு,நரை முடியுடன் மெல்லிய,அழுக்கான நீல நிற நைட்டியுடன் மேற்கு வங்கத்தின் பராபஜார் பகுதியில் உள்ள டன்லோப்பின் தெருக்களில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்காள அரசாங்கத்தை நடத்திய இரா பாசு அவர்கள் வாழ்க்கை அறிவியல் ஆசிரியையாகவும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 34 வருடங்கள் பணியாற்றியவர்.முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பாரா நகரில் வசித்து வந்தார். பிறகு கர்டா அருகில் உள்ள லிச்சு பகன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
அதன்பின்னர், அவர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், தற்போது,டன்லப் பகுதியில், சாலையோரத்தில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இரா பாசு அவர்கள் சாலையோரத்தில் வசிப்பது பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரை மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது. இதன் பின்பு இவர் தற்போதுள்ள நிலைமை இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…