மன்மோகன் சிங் சொன்னதை எங்கள் அரசு செய்து இருக்கிறது – பிரதமர் மோடி

Default Image

குடியரசு தலைவரின் கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியரசு தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வாய்ப்புகளுக்கான நாடக மாறியுள்ளது. தற்போது நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்கமாட்டோம். கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்.  அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசியதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, அவர் சொன்னதை எங்கள் அரசு செய்து காட்டியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் விவசாயி பிரச்சனைகள் குறித்து பேசுவோர் சிறுவிவசாயிகளை மறந்து விடுகின்றனர். விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைள் எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்