நீட் முறைகேடு.. கேரள சட்டமன்றத்தில் முக்கிய தீர்மானம்.!
கேரளா: இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராஜஸ்தான், குஜராத் , பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நீட் முறைகேடு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
தற்போது நீட் முறைகேடு குறித்து கேரளா அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் நீட் (NEET) மற்றும் நெட் (NET) தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.