பரபரப்பு …!சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு …!18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் தர்ணா…!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர்.
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கினர்.இதனால் பெண் செய்தி வாசிப்பாளர் கவிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.
பின்னர் சபரிமலையை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டது.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.