அர்விந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான் ராஜினாமா!
ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் மான் தனது பதவியை பிக்ராம் சிங் மஜிதியாவிடம் அர்விந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, சிரோமணி அகாலி தள் கட்சி மீது, அர்விந்த் கெஜ்ரிவால் போதை மருந்து புழக்கம் குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதை எதிர்த்து, பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மஜிதியா வழக்கு தொடர்ந்த நிலையில், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநிலத் தலைவரான பகவந்த் மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பகவந்த் மான், பஞ்சாப்பில் போதைப்பொருள் மற்றும் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மியின் சார்பில் தொடர்ந்து போராட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் மன்னிப்பு கோரியதற்கு பஞ்சாப் மாநில நிர்வாகிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.