காரணம் எதுவும் தெரிவிக்காமல் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்!

நீதிபதி இந்தர்மீத் கவுர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு, நீதிபதி இந்தர்மீத் கவுர் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலக்கிக் கொள்வதாக நீதிபதி இந்தர்மீத் கவுர் அறிவித்தார். அதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஜாமீன் மனுவை இன்றைக்கே வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் நீதிபதி இந்தர்மீத் கவுர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024