வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.35 விழுக்காடு குறைப்பு ! வீட்டுக் கடன், வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இன்று ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான 3-வது நிதிக் கொள்கையை அறிவித்தது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.75% லிருந்து 5.40% ஆக குறைகிறது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 % இருந்து 5.15 %-ஆக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுவதால் வங்கிகளும் கடன் விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.