ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கிய ரிசர்வ் வங்கி.!
பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதனை சீரமைக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொருளாதார பாதிப்பை சீரமைக்க, 2 சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், ரூ.50 ஆயிரம் கோடி விவசாயக் கடன், வீட்டுக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.