ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!
மூத்த மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![Shaktikanta Das](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/11/Shaktikanta-Das.webp)
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.