ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டது தான் சிறப்பு ரயில்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த 200 ரயில்களில் தமிழகத்திற்கு எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…