அயோத்தியிலிருந்து புதிய மசூதி கட்ட 30 கிமீ தொலைவில் இட ஒதுக்கீடு!
அயோத்தியில் தற்பொழுது பெரிய அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இதனை அடுத்து நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கும் நிலையில், இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகம் சன்னி வக்பு வாரியத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனூஜ் குமார் ஜா ஒப்படைத்துள்ளார்.