Chandrayaan 3 - Water source in Moon [Representative Image]
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது.
சந்திராயன் 3 தரும் தரவுகளை கொண்டு ஆய்வு செய்து வரும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், யூனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், ஜெட் புரபஷனல் லேப் ஆராய்ச்சியாளர்கள் , ஐஐஎம் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் புதிய தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நிலவின் துருவ பகுதியில், 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். அந்த தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வடதுருவத்தில் இருக்கும் தண்ணீரின் அளவானது தென் துருவத்தில் இருக்கும் தண்ணீரின் அளவை காட்டிலும் இரு மடங்காக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
சந்திரனில் உள்ள பனிகட்டி நீரின் தோற்றம் மற்றும் அதன் பரப்பளவை ஆய்வு செய்வதற்காக ரேடார், லேசர், ஆப்டிகல், நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், அல்ட்ரா வயலட் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் தெர்மல் ரேடியோமீட்டர் ஆகிய ஏழு கருவிகளை ஆய்வுக் குழு பயன்படுத்தி உள்ளது.
நிலவில் உள்ள துருவங்களில் தண்ணீர் இருக்கும் பரப்பளவு மற்றும் ஆழம் பற்றிய துல்லியமான தகவல்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையானது, எதிர்காலத்தில் நிலவில் ஆய்வு செய்ய விண்கலன்கள தரையிறங்கும் போதும், சரியான இடங்களை தேர்ந்தெடுப்பதை ஆராய்ந்து வகைப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…