புதிய வேற்று கிரகத்தை கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள்.! வியாழனை விட 13 மடங்கு பெரிது.?
அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி அலுவலகத்தில் வியாழனை விட 13 மடங்கு பெரிய வேற்று கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (பிஆர்எல்) பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு, வியாழனை விட 13 மடங்கு பெரிய அடர்த்தியான வேற்று கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில், பிஆர்எல் (Physical Research Laboratory) விஞ்ஞானிகளால் வேற்று கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட மூன்றாவது வேற்று கிரகமாகும். கண்டுபிடிப்பின் விவரங்கள் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அகமதாபாத் பிஆர்எல் (Physical Research Laboratory) ஆராய்ச்சி நிலையத்தில், இந்தியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். PRL ஆய்வகத்தில் உள்ள மேம்பட்ட ஸ்பெக்ட்ரோகிராஃப் (PARAS)-ஐ பயன்படுத்தி கிரகத்தின் எடை துல்லியமாக அளவிடப்பட்டது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகமனது, TOI4603 அல்லது HD 245134 எனப்படும் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதற்க்கு முன்னர், நாசாவின் TESS செயற்கைகோளானது, அடையாளப்படுத்தப்படாத வகையில், நட்சத்திரத்தை மட்டும் கண்டுபிடித்தது. தற்போது பிஆர்எல் ஆராய்ச்சி குழு அந்த அறியப்படாத நட்சத்திரம் ஒரு கிரகம் என உறுதி செய்து அதற்கு TOI 4603b அல்லது HD 245134b என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கிரகம் பூமியிலிருந்து 731 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஒவ்வொரு 7.24 நாட்களுக்கும் அதன் நட்சத்திரத்தை (பூமி சூரியனை சுற்றி வருவது போல) சுற்றி வருகிறது. இந்த கிரகத்தில் 1396 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்தக் புதிய வேற்று கிரகமானது, வியாழனின் எடையில் இருந்து சுமார் 11 முதல் 16 மடங்கு வரை இருக்கும் எனவும், ஐந்துக்கும் குறைவான துணைகோள்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன.
பூமிக்கு அப்பாற்பட்டு வேற்று கிரகத்தில் இருக்கும் ஒரு உயிரினத்திற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெவ்வேறு இயல்புகள், பண்புகள் மற்றும் வளிமண்டலங்களைக் கொண்ட 5000 க்கும் மேற்பட்ட வெளிக்கோள்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அதன் நட்சத்திரத்திற்கு (பூமிக்கு சூரியன் போல) மிக அருகில் சுற்றும் மிகப் பெரிய மற்றும் அடர்த்தியான ராட்சத கிரகங்களில் ஒன்றாகும்.