உத்தராகண்ட் சமோலியில் ஆறாவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை!

உத்தராகண்ட் சமோலியின் பனிப்பாறை சரிவு மீட்பு நடவடிக்கை இன்றுடன் ஆறாவது நாளாக தொடர்ந்து நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பனிப்பாறை வெடித்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு மீட்பு பணிக்காக மீட்புக் குழுவினர் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கப்பாதையில் உள்ளவர்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் 6-வது நாளாக தொடரும் மீட்பு பணியில் 36 உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 204 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆறாவது நாளாக இன்றும் சுரங்கப் பாதையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025