கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு… வெளியான வீடியோ!

MaritimeSecurityOperations

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர்.  மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு (MV LILA NORFOLK ) கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் பகுதியில் சோமாலியா கடற்கரை அருகே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் சென்றபோது, விரைவுப் படகில் ஆயுதங்களுடன் வந்த 6 கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறி கடத்தலில் ஈடுபட்டனர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கடத்தப்பட்ட லைலா நார்போல்க் என்ற கப்பலை மீட்க சென்னை ஐஎன்எஸ் போர்க்கப்பலை இந்திய கடற்படை அனுப்பியது. இந்திய கடற்படை உடனடியாக கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானமும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை இந்திய கடற்படை உறுதி செய்தது. இந்த நிலையில், அரபிக்கடலில் இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் மீட்டனர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், சரக்கு கப்பலில் கொள்ளையர்கள் யாரும் இல்லை. கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலைவிட்டு தப்பிவிட்டதாக தெரிகிறது. சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சரக்கு கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான உதவியை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அளித்து வருவதாகவும் இந்திய கடற்படை கூறியுள்ளது. கடத்தப்பட்ட கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக வீடியோக்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi