ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத வாய்ப்பளித்தது போல நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.!
வெளிநாட்டிலுள்ள ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பளித்தது,போல நீட் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கக்கூடிய நான்காயிரம் இந்திய மாணவர்களுக்கு தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட்தேர்வு ஒத்திவைக்க பட வேண்டும் என கேரள மாநிலம் கோழிக்கோட்டையை சேர்ந்த அப்துல் அஸீஸ் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில், மாணவர்கள் இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டம் மூலம் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டபட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்கள் தனிமை படுத்துவதற்கான காலத்தை குறைக்கவும், அந்தந்த மாநில அரசுகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது போல, அடுத்த கல்வி ஆண்டில் நீட் தேர்வையும் இது போல எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.