குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி வந்துள்ள நிலையில் இதற்கு முன்பு வந்தவர்கள் பற்றி பார்க்கலாம்…
இந்தியா தனது சுதந்திரத்தை 1947இல் போராடி பெற்றுவிட்டபிறகு, 3 வருடங்கள் கழித்து 1950 ஆம் ஆண்டு ஜன-26இல் தனது முழு அரசமைத்தது. இந்த நாளையே நாம் அனைத்து வருடமும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 74 ஆவது குடியரசு தினத்தை, இந்தியா கோலாகலமாக கொண்டாடவுள்ள நிலையில் பல்வேறு அணிவகுப்பு வரிசைகள், கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்களும் நடைபெறுகிறது.
இந்த வருடம் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம், தனிவிமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இந்திய பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளித்தனர். வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இருந்து வரும் முதல் சிறப்பு விருந்தினர், அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அப்தெல் பத்தா, இந்தியா-எகிப்து உறவை வலுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மற்ற முக்கிய கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் எகிப்திய இராணுவக் குழுவும் பங்கேற்கிறது. குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபரை அழைத்திருப்பது இந்தியாவிற்கும், எகிப்திற்கு இடையேயான நட்புறவின் அடையாளமாகும்.
இதற்கு முன்னதாக 1950 இல் நடந்த அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினராக இந்தோனேசியாவின் ஜனாதிபதி சுகர்னோ பங்குபெற்றிருந்தார். 1961ஆம் ஆண்டின் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டார், 1995இல் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவும், 2007இல் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றனர்.
2014இல் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே வும், 2015இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்த குடியரசு தினவிழா விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர். கடைசியாக 2020 ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அதன்பிறகு கொரோனா பரவலைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ஆண்டு எகிப்து அதிபர் கலந்து கொள்கிறார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…