லடாக்கில் 17000 அடி உயரத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்.!
- இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் பனியில் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார்.
இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்தி கொண்டு பனியில் குடியரசு தினத்தை கொண்டாடினர். தற்போது லடாக்கில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
17000 அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் நின்று”பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என கோஷமிட்டனர்.