குடியரசு தினம்:குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்.!

Default Image
  • இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
  • இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியவந்தார்.

விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு  இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர். இன்று பிரதமர் மோடி ,  ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

நாளை பிரேசில் அதிபருக்கு ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கவுள்ளார்.இந்தியா , பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக நடைபெற உள்ள இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்தில் மெசியாஸ் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் வருகின்ற 27-ம் தேதி பிரேசில் திரும்பவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்