டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியாவில் பல்வேறு பரபரப்பான அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2014 , 2019 என கடந்த இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல பாஜகவால், இந்த முறை தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
பாஜகவின் NDA கூட்டணியில், மிக முக்கிய அங்கமாக இருக்கும் கட்சிகள், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் (16 எம்பிக்கள்) , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (12 எம்பிக்கள்) ஆகியவை ஆகும். இது தவிர மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட சிறு கட்சிகள், சுயேட்சைகளும் NDA கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதில், TDP மற்றும் JDU கட்சிகள் அமைச்சரவையில் முக்கிய துறைகள், மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை கேட்பதாகவும், தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அமைச்சரவை குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக, மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளான உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை, ரயில்வேறுதுறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சட்டத்துறை ஆகியவற்றை கூட்டணிக்கு ஒதுக்காமல் தன்வசம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கு விவசாயம் உள்ளிட்ட பிற துறைகளை அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், மற்ற துறைகளில் இணை அமைச்சர் பதவிகள் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் NDA எம்பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த முக்கிய ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…