கற்பனையில் தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர்கள் எழுதிவிட முடியாது!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பத்திரிகையாளர்கள் தாங்கள் நினைப்பதையெல்லாம் கற்பனையாக எழுதிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக தி வயர் (The Wire) இணையதளம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது நீதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தாங்கள் உயரமான இடத்தில் இருப்பதாக எண்ணத் தொடங்கும் போதே, ஊடகங்கள் மீதான மதிப்பு சரியத் தொடங்கி விடுவதாக தலைமை நீதிபதி அப்போது கூறினார். குறிப்பாக காட்சி ஊடக பத்திரிகையாளர்கள், ஒரே இரவில் ரட்சகர்களாக மாறிவிட்டதைப் போல் பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.
பத்திரிகையாளர்கள் தங்களது கற்பனையில் தோன்றுவதையெல்லாம் எழுதிவிட முடியாது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் நீதிபதி தெரிவித்தார். அதேநேரம், ஊடகங்கள் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப் படும் போதெல்லாம் அதற்கு எதிராக தாம் குரல் கொடுத்திருப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.