தனது தாய்க்கு தொடர் மிரட்டல்… எங்கள் பாதுகாப்பு அரசின் பொறுப்பு – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்

Sakshi Malik

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை அச்சுறுத்துவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கின் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் சாக்‌ஷி மாலிக். இதையடுத்து, பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் மற்றும் தொடர் போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.21ம் தேதி சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வானார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார். இதுபோன்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா உள்ளிட்ட சில தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பியளிப்பதாக தெரிவித்தனர்.

3-வது முறையும் ஆஜராகாமல் சம்மனை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்..!

இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை குறிவைப்பதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தனது தாய்க்கும், குடும்பத்துக்கும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வருகிறது. பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார்.

அவரால் எனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எங்கள் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு. பிரிஜ் பூஷன் செல்வாக்கு மிக்கவர் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் தனது இல்லத்தில் இருந்தே பல்வேறு விஷயங்களை செய்வார். மல்யுத்த கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அது இளம் வீரர்களுக்கு பயனளிக்கும்.

சஞ்சய் சிங்குடன் மட்டுமே எங்களுக்கு பிரச்னை இருந்தது. அவரை தவிர புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிக குழு உடன் எந்த பிரச்சனையும் இல்லை. மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது ஜூனியர்களின் மல்யுத்த வாழ்க்கையை அளித்துவிட்டதாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். என்னால் முடியாததை ஜூனியர் பெண்கள் நிறைவேற்ற வேண்டும். நாட்டுக்காக வெள்ளி, தங்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்