கர்நாடகாவில் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் திறந்ததை அடுத்து 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பட்டப்படிப்பு, பொறியியல்,டிப்ளமோ கல்லூரிகள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது . கல்லூரிகள் திறந்த 5 நாட்களில் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள தட்சிணா பகுதியில் கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் உட்பட 16,441 பேர் கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டனர் .அதில் 21-ம் தேதி நிலவரப்படி,ஒரே கல்லூரியில் உள்ள 6 மருத்துவ மாணவர்கள் உட்பட 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில் 6 மருத்துவ மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள் மங்களூரு தாலுகாவையும்,பன்ட்வாலில் இருந்து 7 பேரும்,சல்லியாவை சேர்ந்த 4 பேரும் ,புட்டூர் மற்றும் பெல்தங்கடியிலிருந்து தலா ஒருவர் என்ற வீதம் மொத்தம் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் இருவர் தங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் தனிமைப்படுத்தி கொண்டனர் . மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராமசந்திர பயாரி தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…