புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ இன்று திறப்பு!
புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா கேட் முதல் குடியரசு தலைவர் மளிகை வரை புராணமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்தது.
இதற்கான பணிகள் 2019ல் தொடங்கின. கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இதுபோன்று, இந்தியா கேட் பின்புறம் நிறுவப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.