அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு நீக்கம்!
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அதில், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில் “ஒரே நாடு, ஒரே சந்தை” திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.